Tuesday, November 29, 2011

இராப்பிசாசுகள்

ஓயாமல் குறைக்கும்
நடுநிசி நாய்கள் ...

ரத்தம் உரியும்
கொடும் கொசுக்கள் ...

தீரா தாகங்களின்
கரிய ஏக்கம் ....

யார் மேலோ
ஏற்பட்ட வடியாத
கோபம் ...

இவை யாவும்
என் தூக்கம் கொல்லும்
இராப்பிசாசுகள் ....

Sunday, November 27, 2011

The clinging frog

In the heavy rains of the past days near my house outer wall surrounding,there are many froglings hoping around and some of it are sticking with the wall,somehow they climbed near the top of the wall and hanging on it.May be they feel that is the safe place from the falling rain.
On seeing this I have a question within me.Is that questions comes only for me ? ha ha.
Is there any difference between them and me.I am just another creature evolved highly many levels than the clinging frog.The frog clinging in the wall.I am same with the people around me and the situation. The question is whether we have to be that frog forever.

Tuesday, November 01, 2011

தாயும் மண்ணும் ...

பெரும் பாரம் சுமக்கும்
இவர்கள் ,
ஒரே கருவறையின்
பேரிருள் கண்ட
ஆழ்கடல்கள் ...

புது பிறப்பின்
தளிர் வாசங்களை,
உயிர் நேசங்களை,
தன் வழியாய்
அனுமதிக்கிறார்கள்.,
வலியின் துணை கொண்டு ...

ஓராயிரம் கதைகள்,
தன்னுள் ஒளித்திருப்பர்,
மணற்துளிகளை
வருடியவாறு
அமர்ந்திருக்கிறார்கள்.,
காலத்தின் கரையோரம்
மௌனக்கதை பேசியபடி.,


மரண ஓலங்கள்
கேட்ட அவர்களின் ,
நாதியற்ற கைகள் ,
அனாதியில் அழுதும்
அடங்கவில்லை .,
ஆழத்தில் இருந்து
எழுந்த விம்மல்களை ,
அவர்கள் தனிமையால்
தணிக்கிறார்கள் ...

கறை படிந்த
கைகளை கழுவும்போது
அடர் நிறத்தில்
காரிருளோடு
கலந்திருந்தது அவர்களின்
செந்நிற காலங்கள்...